டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று 27 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 27 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வாரம் சீக்கிய மத போதகர் ராம்சிங் மற்றும் பஞ்சாப் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் ஆதரவு எழுந்துள்ளது. டெல்லியில் கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.