பிரியாணி என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் ஸ்விகி நிறுவனம் தற்போது வெளியிட்ட தகவலில் இந்த ஆண்டு அந்நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதலிடத்தில் பிரியாணி இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாகவும், அதற்கு அடுத்த பட்டியலில் மசால் தோசா, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் இடம்பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.