மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும்.
இதன் மூலமாக தான் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து புளோரிடா மின் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுகாதாரத்துறை குழு ஒன்றை அமைத்து இந்த மலைப்பாம்புகளை உணவாக சாப்பிடுவதற்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இது குறித்த ஆய்வுகள் துவங்கியுள்ளன. இது குறித்த ஆய்விற்காக பர்மீஸ் மலைப்பாம்பின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மலைப்பாம்புகள் சாப்பிட பாதுகாப்பானது என முடிவுகள் வந்துவிட்டால், சீனாவை அடுத்து அமெரிக்கர்களும் பாம்புகறி சாப்பிடத் ஆரம்பித்துவிடுவார்கள். சீனர்கள் ஏற்கனவே இப்படி வித்தியாச வித்தியாசமான விலங்குகளை உணவாக உண்டதால் தான் கொரோனா வந்ததது என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து தற்போது அமெரிக்கர்களும் பாம்பை உணவாகச் சாப்பிட முன்வந்திருப்பது பல நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.