Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்….. அரசின் முடிவுக்கு ஆளுநர் எதிர்ப்பு…. குழப்பத்தில் பொதுமக்கள் ..!!

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு எந்தவித தடையுமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூடிய அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதனிடையே பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடன் பயணித்தவர்களுடைய விவரங்கள் கணக்கெடுத்த பொழுது புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் அந்த விமானத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இருக்கைக்கு அருகில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து அவர் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடத்தப்பட்டால் தமிழகத்திலிருந்து  ஏராளமானோர் புதுச்சேருக்கு வருவார்கள். இதனால் தொற்று பரவும் அபாயம் இருக்கின்றது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளித்த சில நேரத்திலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இப்படியான கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை ? புதுச்சேரியை பொறுத்தவரை பேரிடர் மேலாண்மை பிரிவினை தலைவராக முதல் அமைச்சர் நாராயணசாமியே உள்ளார். எனவே தலைவருடைய உத்தரவுதான் செயல்படும். இந்த உத்தரவு கிரண்பேடி ரத்து செய்வாரா ? அல்லது ஏதேனும் பரிந்துரை வழங்குவாரா ? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Categories

Tech |