தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஆலோசனை செய்து ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த அவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.