கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு கோவில் பூசாரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு இருப்பது பூசாரிகளின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.