நாட்டில் பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகம் அமைந்து நூற்றாண்டுகளில் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “முஸ்லிம் பெண்களின் கல்வி, மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியின் பயனை ஒவ்வொருவரும் பெற வேண்டும். அதனால் பாலின பாகுபாடு இல்லாமல் அரசு அனைவருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும். அரசு இவ்வாறு பாலின பாகுபாடு அடிப்படையில் உதவி செய்வதால், மற்றவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும். அதனால் அரசு இதனை தவிர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.