மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
நம் வீட்டில் உள்ள மின் இணைப்புகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு பணியாளர்களை நாம் அழைக்கிறோம். அவர்கள் வந்து அந்த மின்தடையை சரி செய்துவிட்டு நம்மிடம் இருந்து பணம் வாங்கி செல்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுப்பது சரியா தவறா என்பதை பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் மின்தடையை சரி செய்ய ஏதாவது பொருட்கள் வாங்க பணியாளர்கள் பணம் கேட்டால் 9445857593, 9445857594 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இல்லையென்றால் 24 மணி நேரமும் செயல்படும் 1912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.