சென்னை பள்ளிக்கரணையில் மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மனைவி மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பழனிவேல் ராஜா என்ற அந்த நபர் 50 லட்சம் வரை கடன் வாங்கி இருந்துள்ளார். கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்து வந்துள்ளார். ஆனால் அவர் வருமானம் முழுவதும் தன்னிடம் கொடுக்குமாறு மனைவி சாந்தா தேவி அவருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சல் தாங்காமல் பழனிவேல் ராஜா தற்கொலை செய்துகொண்ட சிறிது நேரத்தில் அது குறித்த கவலையே இல்லாமல் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சாந்தா தேவி மாயமாகி விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.