நேற்று ஒரு நாளில் மட்டும் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கொரோனாவினால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதில் சுமார் 2 கோடி பேர் அமெரிக்காவில் பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்தைய வைரஸை விட வேகமாகவும் பரவுகிறது என்ற அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து பெற்ற உலக நாடுகள் பல பிரிட்டனின் விமான சேவையை ரத்து செய்துள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் பிரிட்டனில் 36, 804 பேருக்கு கொரோனா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் பிரிட்டனில் 691 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு பலி எண்ணிக்கை அதிகரிப்பதற்கு புதியவகை கொரோனா தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர திட்டமிட்டிருந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.