இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் கொரோனா விதிமுறைகள் தெரியாததால் தான் தவறு நடந்ததாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவை நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக அங்குள்ள கிளப்புக்கு அழைத்துச் சென்றதால் தான் அவர் அங்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு விதிமுறைகள் தெரியவந்ததும் அவர் அதை சரியாக பின்பற்றினார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக அதிகாலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா அதன்பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.