பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வருகின்ற 28 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக்குப் பிறகே புதிய தளர்வுகள் அல்லது ஜனவரி மாதம் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.