Categories
மாநில செய்திகள்

ஆதார் இல்லை என்றால் ஹால்டிக்கெட் இல்லை… டிஎன்பிஎஸ்சி அதிரடி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் என டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் குரூப் 1 தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |