Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணமாகவில்லை…. ஏக்கத்தில்… தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் 52 வயதுடைய விஜயராகவன். இவர் நெசவு  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகாத ஒரு மகன் மற்றும்  மகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்  விஜயராகவன் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த அவர் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விஜயராகவனை மீட்டு  மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |