இளைஞர் ஒருவர் தன் காதலி செய்த துரோகத்தை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த Sam Nun என்பவர் தன் காதலி தன்னுடன் இருந்து கொண்டே செல்போனில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் தன் காதலியை தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கண்களை உற்று நோக்கியுள்ளார். அதாவது வீடீயோவை Zoom செய்து அவர் காதலியின் கண்களை கூர்ந்து பார்த்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
அதாவது இவரின் காதலியான அப்பெண் காதலர்களைத் தேடும் இணையதளமான Tinter என்ற இணையத்தில் ஆண்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். உடனே தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்ததுடன் Sam ஐ அந்த பெண்ணை கைவிடுமாறும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.