Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?… முதல்முறையாக வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . தற்போது நடந்து வரும் நான்காவது சீசன் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் வரும் கம்பீரமான பிக்பாஸின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் போது சீரியல் நடிகர் அமித் தான் பிக்பாஸாக குரல் கொடுக்கிறார் என தகவல் கசிந்தது .

The Face Behind the Bigg Boss Voice Revealed! | Astro Ulagam

ஆனால் இதனை மறுத்த அமித் ‘நான் கன்னடத்தில் ஒரு முறை பிக்பாஸாக குரல் கொடுத்திருக்கிறேன் , ஆனால் இதுவரை தமிழில் நான் குரல் கொடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார் . இந்நிலையில் முதல்முறையாக பிக்பாஸாக குரல் கொடுப்பவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. சச்சிதானந்தம் என்ற குரல் வல்லுநர் தான் அந்த கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரர். இவர் பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |