Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும்” – கமல் ஹாசன்.!!

ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கே.பாக்கியராஜ், கே. எஸ் ரவிக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்  பேசியதாவது:-காந்தி ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு செருப்பு கீழே விழுந்து விட்டது. அதை ஒரு பெண் எடுத்து சென்று விட்டார். அந்தசமயம் காந்தி இன்னோரு செருப்பையும்  கழற்றி விட்டார்.

ஒரு செருப்பினால் யாருக்கும் பயனில்லை. நான் காந்தியின் ரசிகன். நான் சென்ற இடத்தில் என் மீது செருப்பை வீசினர். இன்னொரு செருப்பும் வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பு விரைவில் வரும், எனக்கு அந்த தகுதி உண்டு. என் மீது செருப்பை வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. வாழ்த்துக்கள் தொடர்ந்து கிடைத்தால் வெற்றி நமக்கு தொடரும் என்று  தன் மீது செருப்பு வீசப்பட்டதையும், காந்தியுடைய வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேசினார்.

Categories

Tech |