Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடி அழிந்து…. இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவு…. நீங்கா துயர சம்பவம்…!!

தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் “வில்” கோடி என்றால் வானைத் தொடும் முனையாகும்.

சிறந்த துறைமுக நகரம் என்று பல்வேறு பெருமைகளை கொண்ட இந்த தனுஷ்கோடி நகரம் சில அவருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ஒரு நாளில் இரவில் அழிந்து போனது. நள்ளிரவில் உறக்கத்திலிருந்த அப்பகுதி மக்களை பெரிய பெரிய அலைகள் அப்படியே வாரி எடுத்து சென்று கொண்டு இரையாக்கின. இந்த சம்பவத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து தொடர் மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் உள்வாங்குதல் என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் நகரமே அழிந்து போனது.

இன்ப சுற்றுலாவுக்கு ரயிலில் தனுஷ்கோடி வந்தவர்கள் கூட தடம்புரண்டு கடலில் மூழ்கி இறந்தனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்து அந்த நகரை அழித்து விட்டது. இந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்து இன்றுடன் 56 வருடங்கள் முடிந்து உள்ளன. எனினும் இந்த பகுதிக்கு மின்சாரம் மருத்துவ வசதி என்று எதுவுமே கிடையாது. தனுஷ்கோடியின் பாதிப்படைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இன்று பார்வையிட்டு கொண்டு தான் வருகிறார்கள். இத்தனை அழிவிலும்  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலம் பாம்பன் பாலம் அசையாமல் இன்றும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |