கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ஆர்பிஐ இணையதளத்தில் அறியலாம். மேலும் அங்கீகாரமற்ற கடன் செயல்கள் குறித்து காவல் துறையிலோ அல்லது sachet.rbi.org.in என்ற இணைய தளத்திலோ புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.