Categories
மாநில செய்திகள்

உலகிற்கே சோறு போடும்…. விவசாயியாக உள்ளதில் அதிக சந்தோசம் – முதல்வர் டுவிட்…!!

உலகிற்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

வருடந்தோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் விவசாயிகள் கடின உழைப்பை போற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று போற்றப்படுகின்றது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழி கூட இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் விவசாயிகள் அனைவரையும் கடவுளாக போற்ற வேண்டும். அவர்களுக்கு நாம் அனைவரும் துணையாக நிற்க வேண்டும்.

மத்திய அரசுக்கு மத்திய அரசின் வேளாண் தங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 28 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று தேசிய விவசாய தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகின் தலையாய தொழிலான உழவுத் தொழிலை செய்து வரும் விவசாய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்களுக்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |