பிரபல கவிஞர் சுகதாகுமாரி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான சுகதாகுமாரி (வயது 86) காலமானார். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்கனவே நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் பத்மஸ்ரீ, கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகளில் ரத்ரிமாஜா, அம்பலமணி, ஸ்வப்ன பூமி ஆகியவை முக்கியமானவை ஆகும்.