கோழி இறைச்சி மசாலாக்களுடன் நன்றாக சேருவதற்காக 20 நிமிடம் வேக வைத்து விடுவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் செயலிழந்து விடுகிறது.
கோழி இறைச்சியையும், மீனையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம். ஏனெனில் அதற்கு காரணம், நமது சமையல் முறை. பல வகை மசாலாக்களை அதில் பயன்படுத்துகிறோம். அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மேலும் கோழி இறைச்சி அந்த மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து போகிறது.
ஆனால் அந்த அளவுக்கு வேகவைக்காமல் சாப்பிடுவதே ருசியானது என்ற கருத்து மேலை நாடுகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. அது ஆரோக்கியமானதல்ல. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் ஹார்மோன்களும், ஆன்டிபயாடிக்குகளும் இருக்கிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் இறைச்சிக்கோழி பண்ணைகளில் ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல.