நடிகை ஹன்சிகா ‘மஹா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ‘மஹா’ . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . வாலு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா ,சனம் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர் . ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .
Its been a phenomenal journey with my 50th film #Maha. I thank my crew, co-stars, producer for investing their heart and soul into the film. Postproduction work is in full swing and I am extremely happy with the way it's shaping up. @malikstreams @MathiyalaganV9 @dir_URJameel
— Hansika (@ihansika) December 23, 2020
இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக நடிகை ஹன்சிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இது எனது 50-வது படமான ‘மஹா’வுடன் ஒரு அற்புதமான பயணம் . படத்தில் தங்கள் அன்பையும் ,ஆன்மாவையும் முதலீடு செய்த எனது சக நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன . மேலும் அதை வடிவமைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.