Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 1 முதல்…. இனி குப்பைகளை கொட்ட கட்டணம் …!!

குப்பைகளை கொட்டுவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்  என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குப்பைகளை  கொட்டும் வீடுகள்  10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வணிக வளாகங்கள்  1000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலும் கட்டணத்தை  செலுத்த வேண்டும். மேலும் உணவு விடுதிகளுக்கு   300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும் திரையரங்குகள் போன்ற பகுதிகளுக்கு   750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும்.

மருத்துவமனைகள் 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரையிலும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டினால்  அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஇடத்தில் குப்பைகளை கொட்டினால் 500 ரூபாயும்  கட்டட கழிவுகளை கொட்டினால் 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க  தவறினால் 5,000 ரூபாயும் குப்பைகளை எரித்தல் 2,000 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்  என்றும்  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |