Categories
மாநில செய்திகள்

Flash News: எச்சரிக்கை இல்லை கட்டளை – விஜய் ரசிகர்களால் தமிழகத்தில் பரபரப்பு…!!

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மற்றும் பேனரால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை பேட்டியளித்த சீமான் சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் ஒரு போஸ்டரில் மன்னிப்பு என்ற வார்த்தை தவறாக அடித்து ஒட்டியுள்ளனர்.

Categories

Tech |