பீன்ஸ் கேரட் பருப்புக் கறி செய்ய தேவையான பொருள்கள் :
பீன்ஸ் – 1/2 கிலோ
கேரட் – 2
துவரம் பருப்பு – 2 கைப்பிடி அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மலர்ந்த பதத்தில் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துப் பிரட்டவும். அதனுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் கேரட்டைச் சேர்த்து, பருப்பு தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும். காய்களுடன் உப்பு, காரம் சேர்ந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் பிரட்டிவிடவும். காய்கள் பருப்புடன் சேர்ந்து கெட்டியாகி கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்