பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் என அரசு தரப்பிற்கு பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதியும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று ஆலோசித்தனர். மேலும் கல்வி அமைச்சர் முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.