Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை: இந்த app-களை பயன்படுத்தாதீர்கள்… சென்னை போலீஸ் அட்வைஸ்..!!

பல்வேறு முறையில் கடன் வழங்கும் தொடர்பான ஆப் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதால் இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: “கூகுள், ப்ளே ஸ்டோரில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடன் வழங்குவது தொடர்பான செயலிகள் ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படவில்லை. அதாவது loan appஇன் நடைமுறைச் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவை. இந்த ஆப்களை பயன்படுத்துவோரின் செல்போனில் இருந்து அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்டவர்களின் தனி உரிமை மீறும் வகையில் பயன்படுகின்றது.

எனவே கடன் அடிப்படையிலான இந்த வகையான ஆப்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. அத்துடன் தங்களது ஆதார் இணைப்பு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அந்த ஆப்புகளில் பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. loan app ஆப்புகள் மூலமாக அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல்கள் இருந்தால் பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்கலாம்.

லோன் அமைப்புகளின் உண்மை தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் சரிபார்க்கவும். பின்னரே ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது என்று காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |