ஸ்மார்ட் போனில் கடன் ஆப் மூலமாக கடன் எடுப்பவர்கள் இதை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன் முழுவதுமே ரிசர்வ் வங்கியால் NBFC பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் ஆப் களில் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள்.
2.இந்த அப்ளிகேஷன் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லாத் தகவல்களையும் சேகரித்து உபயோகிப்பவர்களின் உரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன.
3.கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்கள் ஆதார் அல்லது வங்கி விபரங்களை மேற்படி பதிவு பெறாத முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்கள் கொடுக்க வேண்டாம்.
4.உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த கடன் ஆப்களால் எடுக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
5.உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் அழைப்புகள் வந்தால் காவல்துறையில் புகார் கொடுங்கள். இந்த அப்ளிகேஷனில் உள்ள தொடர்பு விவரங்கள், குறைதீர்க்கும் அதிகாரியின் பெயர்கள் மோசடி ஆனவை