வங்கிகள் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் இன்றே ஏடிஎம்களில் சென்று தேவையான பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வங்கிகள் என்பது பணம் தொடர்பான நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வங்கிகளில் தொடர் விடுமுறையில் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25ஆம் தேதி நாலாவது சனிக்கிழமை என்பதால், 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது.
எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் என்பதால் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.