பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ‘பால் கேட்ச்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . நேற்றைய எபிசோடில் இந்த டாஸ்க்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் பேசி முடிவெடுத்து தங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவித்தார் . இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகவும் பிக்பாஸ் அறிவித்திருந்தார் . இதனால் முதல் 3 இடங்களைப் பிடிக்க ரியோ, ஆரி, சோம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இறுதியில் ரியோ ,ரம்யா ,சோம் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் டாஸ்க்கின் நான்காம் பகுதி நடைபெறுகிறது.
#Day81 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/CsJLAy4Gcu
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020
அதில் போட்டியாளர்களுக்கு கோல்ட் பால் அனுப்பப்படும். அதில் பாலை பிடிப்பவர்கள் போர்டில் இருக்கும் சக்திகளில் ஏதாவது ஒன்றை செயல்படுத்த வேண்டும். இதில் கோல்டு பாலை பிடித்த பாலாஜி தன்னுடைய மதிப்பெண்களில் நூறு மதிப்பெண்களை அதிகரித்துக் கொண்டார். பின் ரம்யா ,ரியோவின் மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்குகிறார் . இதையடுத்து கேபி, பாலாஜியின் மொத்த மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்குகிறார். இதனால் கோபம் அடைந்த பாலாஜி கேபி அடுத்த ஜீரோ நீதான் என கூறிவிட்டு செல்கிறார் .