Categories
தேசிய செய்திகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில்… 60 போலி apps… மக்களே அலர்ட்டா இருங்க…!!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 போலி apps-க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலக மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அவர்கள், அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி எதுவும் அழிவதில்லை. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல்வேறு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் சிலவற்றில் மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படவில்லை.

எனவே இந்த லோன்ஆப்களின் செயல்பாடுகள் அங்கீகாரம் இல்லாதவை. இந்த அப்ளிகேஷன்கள் உபயோகிப்பவர்களின் கைப்பேசியில் எல்லா தகவல்களையும் சேகரித்து, பொது மக்களின் தனி உரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன. அதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |