நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் உங்களுக்கு தேவையான பணத்தை இன்று எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.