எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறப்பு புகைப்படங்களை ‘தலைவி’ படக்குழு வெளியிட்டிருந்தது.
It was not just an honour to play the role of Puratchi Thalaivar MGR, but a great responsibility. I thank director A.L. Vijay & producers @vishinduri @shaaileshrsingh for having faith in me. I humbly post these pics in Thalaivar’s memory, today.#Thalaivi #MGR #ArvindSwamiasMGR pic.twitter.com/F4KY07Q4Dt
— arvind swami (@thearvindswami) December 24, 2020
இந்நிலையில் இன்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் -ன் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக தலைவி படத்தில் நடித்திருக்கும் புதிய புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடித்தது மரியாதை மட்டுமல்ல ஒரு பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்