ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனா அச்சத்தால், நடப்பு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்றும், செமஸ்டர் தேர்வுக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.