இந்தியாவில் 59 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் ரூ.59,000 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.35,534 கோடி ஒதுக்கப்படும். எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கல்வி உதவித் தொகை திட்டம் மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.