தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு தரப்பிற்கு பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதியும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதியும் பள்ளிகள் நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என ஆலோசித்தனர். மேலும் கல்வி அமைச்சர், முதல்வரின் ஒப்புதல் பெற்ற பிறகு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.