Categories
தேசிய செய்திகள்

வேணும்னா பாருங்க…! கண்டிப்பா நடக்கும்… வாபஸ் வாங்குவாங்க… முடிவுக்கு வரும் போராட்டம் …!!

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகள் போராட்டம் விரைவில் வாபஸ் ஆகும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் புதிய வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறப் போவதில்லை என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகள் தங்கள் போராட்டங்களை விரைவில் வாபஸ் பெறுவார்கள் என நம்புவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |