Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்…. நீலகிரி வந்த 16பேர்….. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

இங்கிலாந்து நாட்டில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அண்மையில் வந்துள்ள 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்திலிருந்து 16 பேர் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், அந்த 16 பேருக்கும் மீண்டும் கொரோன பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணம் செய்த 109 பேரும் கண்காணிக்க படுவார்கள் என்று திருமதி இன்னசன்ட்  திவ்யா கூறியுள்ளார்.

Categories

Tech |