பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அது சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில் சதீஷ்குமாரின் கல்லறைக்கு சதீஷ் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்துள்ளனர். தலை, கழுத்து, வயிறு மற்றும் காலில் என அனைத்து இடங்களில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது மட்டுமல்லாமல், அவருடைய அப்பாவின் சமாதிக்கு சென்று கொண்டு அங்கேயே வைத்து சதீஷை எரித்துள்ளனர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பிரிந்து விட்டதால், இரண்டாவது மனைவி லட்சுமி வரை திருமணம் செய்துள்ளார் இதனை அடுத்து மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பதால் அவருடைய முதல் கணவர் தான் சதீஷை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் இதற்கு லட்சுமியும் உடந்தையாகஇருந்தார்என்று கூறப்படுகின்றது. சதீஷ் பல்லாவரத்தில் இருந்து ஒரு நிலத்தை விற்று ஒரு கோடி ரூபாய் பணத்தை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த பணத்தை பெரும் ஆசையில் லட்சுமி தனது முன்னாள் கணவருடன் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.