வேலை கிடைக்காததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். எம் சி ஏ பட்டதாரியான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் கவியரசன். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட கவியரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் விசாரித்த போது கவியரசன் கடந்த இரண்டு மாதங்களாக மன விரக்தியில் இருந்ததும் விஷம் குடித்ததற்கு பிறகு தனது அக்கா பிரபாவிடம் அதனை கூறியதும் தெரியவந்துள்ளது.