Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னோட மனைவி போய்ட்டா…! என்னால தனியா முடில…. மகனை கொலை செய்த தந்தை ..!!

திருச்சி  மாவட்டத்தில் மாற்று திறனாளி மகனை கழுத்தை அறுத்து கொன்று செப்டிக் டேங்கில் மூடி வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லட்சுமிபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேலுக்கு கோபி என்ற மாற்றுத்திறனாளி மகன் இருந்தார். கடந்த 9 வருடங்களாக மகனை தங்கவேல் மனைவி செல்வராணி உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்கவேலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் மகனை பராமரிப்பதில்  சலிப்பும், கோவமும் அடைந்த தங்கவேல் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். அருகில் இருந்த சேப்டிக்டேங் மூடியைத் திறந்து அதில் உடலை வீசி சிமெண்ட் பலகை மூடியால் மூடி வைத்துவிட்டு தலைமறைவானர். அருகில் இருந்தவர்கள் கழிவுநீர் தொட்டியை மூடியை திறந்து கிடப்பதை கண்டு அங்கு சென்று பார்த்த போது கோபியின் சடலம் இருப்பதை  அறிந்து அதிர்ச்சியுற்றனர்.

இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்ட உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக செய்வதற்க்காக அனுப்பி வைத்தனர். மேலும் தங்கவேலுவை  கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |