ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை கடத்தி, கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு தாம்பரம் சாலையோரத்தில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், சந்தேகத்தின் பேரில் ராஜேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.