Categories
தேனி மாவட்ட செய்திகள்

காசு இல்லாம தானே…. அரசு ஆஸ்பத்திரிக்கு வராங்க…. இந்த நிலைமை மாறுமா…??

நோயாளி ஒருவருக்கு தரையில் படுக்க வைத்து ட்ரிப் ஏற்றியுள்ள சம்பவம் சாமானிய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குஉள் நோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளி ஒருவரை வார்டுக்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப் ஏற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாமானிய ஏழை மக்கள் பணம் இல்லாத காரணத்தால் தான் அரசு ஆஸ்பத்திரியை நாடி வருகின்றனர். ஆனால் சில அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளில் ஒன்றான படுக்கை வசதிகூட இல்லாமல் இருப்பது பொதுமக்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது தேனி ஆண்டிபட்டி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறிய இந்த சம்பவம் போன்று மீண்டும் மருத்துவமனையில் நடக்கக்கூடாது என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |