புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு கோடி பேரின் கையெழுத்துடன் திரு ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். இந்த நிகழ்வுகளின் போது திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 29ம் நாளாக தலைநகரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயகளுக்கு ஆதாராகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் அதனை இன்று குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் சந்தித்து கொடுக்க உள்ளதாக கூறி இருந்தது.
இந்நிலையில் 2 கோடி பேரின் கையெழுத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்ட காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருமதி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க திரு ராகுல் காந்தி உள்ளிட்ட 3 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திரு ராகுல் காந்தி விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் காதுகொடுத்து கேட்கவேண்டும் கேட்டுக் கொண்டார். சட்டங்களால் அரசுக்கு ஆதரவான முதலாளிகள் மட்டுமே பயன் பெறுவார்கள் எனபதால் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்றும் திரு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.