Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனிமே கட்டணம் கிடையாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 ரூபாய் முதல் 2000 ரூபாய், மருத்துவமனையில் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படும்.

மேலும் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. கட்டட கழிவுகளை கொட்டினால் 5,000 ரூபாய், குப்பைகளை தரம்பிரித்து அளிக்கத் தவறினால் 5 ஆயிரம் ரூபாய், குப்பைகளை எரித்தல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |