Categories
அரசியல் மாநில செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்… கமலுக்கு ரிவிட் அடித்த அமைச்சர் கடம்பூர் ராஜு…!!!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சொத்துக் கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று சவால் விட்டுள்ளார்.

இன்று கோவில்பட்டியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர் எம்.ஜி.ஆரை பழித்துப் பேசிய எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதாக வரலாற்றிலேயே இல்லை என்று கூறினார். மக்கள், எம்.ஜி.ஆரை தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். தனது சொத்துக் கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா? என்று சவாலை விடுத்துள்ளார். நடிகர் கமலஹாசன் தன் மனசாட்சிப்படி தன்னுடைய ஊதியம் பற்றி கணக்கு சொல்லட்டும் பார்க்கலாம், நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம். என்று கூறியுள்ளார்.

Categories

Tech |