திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு ஹரிணி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ஹரிணியும் அவளது தாய் வித்யாவும் மாலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு வயது குழந்தையான ஹரிணி பூ பறிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டனர். பின்னர் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இக்குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.