டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ரயில் மூலம் தப்பி ஆந்திரா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வந்த பெண் கொரோனா தொற்றுடன் ரயிலில் பயணம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அந்தப் பெண் ரயில் மூலம் தப்பிய ஆந்திரா வந்தடைந்துள்ளார். ரயில் பயணிகள் அதிகம் பேர் இருந்ததால், தப்பி வந்த பெண் மூலம் புதிய வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.