மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். பிரிட்டோ தயாரித்து இந்த படத்தின் வெளியீட்டு உரிமை லலித் குமாரிடம் இருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வர இருந்த மாஸ்டர் திரைப்படம் 8 மாதங்கள் தள்ளிப்போன நிலையில் படத்தின் மொத்த பணிகளையும் முடித்து குழுவினர் தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால் மாஸ்டர் படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
தணிக்கையில் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கூறியதற்கு படக்குழுவினர் உரிய விளக்கத்தை கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இறுதியாக யு/ஏ சான்றிதழ் மாஸ்டர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. படக்குழுவினர் திரைப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் என்பதை தெரிவித்திருந்தாலும் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.